Wednesday, 16 June 2021

முடியவில்லை


முடியவில்லை







எனக்கு நீ செய்த தூரோகத்திற்கு


உன்னை  அழிக்க நினைக்கும்


என் இதயத்திற்கு தெரியவில்லை


என்னால் நீ அனுப்பிய


குறுஞ்செய்தியை கூட


அழிக்க முடியவில்லை என்று ❗❕❗ 

நீயே இல்லையே



நீயே இல்லையே



 



சொல்ல காதலும்...
எழுத வார்த்தைகளும்
நிரம்பிருந்தென்ன
பயன்...
வாசிக்கவோ...
கேட்கவோ...
நீயில்லை எனும் பொழுது..!!!

Sunday, 6 June 2021

வெறுப்பும் காதல் தானோ


வெறுப்பும் காதல் தானோ 


 நம்மை

வெறுப்பவர்களை நாம் விரும்புவதில்லை'

'இது'

காதலில்

 மட்டும்

வேறுபட்டிருக்கிறது

Sunday, 23 May 2021

மெய்



மெய் 


உண்மை தான் 

சில நேரம் சாபமாகவும்;

சில நேரம் வரமாகவும் ;

அமைந்து விடுகிறது 

Saturday, 22 May 2021

என் பதிலே



என் பதிலே 






என் விழிகள் தேடும் வர்ணங்கள் நீயே..


என் தனிமை விரும்பும் நினைவுகள் நீயே..


என் கற்பனை வரையும் ஓவியம் நீயே..


என் சிந்தனை கிருக்கும் கவிதை நீயே..


என் இரவுகள் காணும் கனவுகள் நீயே..


என் இளமை புசிக்கும் ஆசைகள் நீயே..


என் காதல் திருடும் பொக்கிஷம் நீயே..


என் இதயம் தொடும் சுவாசம் நீயே..


என் உயிர் வாழும் வாழ்க்கை நீயே..


உன்னில் நான் இல்லை என்றாலும் என்னில் நீயே....... 

Sunday, 16 May 2021

முதல் நிலை காதல்



முதல் நிலை காதல்


 என்ன மாயம் செய்தாய்

காரணம் இல்லாமல் கூட

உன் மீது காதல் வருகிறதே

Wednesday, 12 May 2021

வலிகள் புரியுமா❓




வலிகள் புரியுமா❓




அழுது 

கொண்டிருக்கும்

 கண்களை விட ;

 அதை மறைக்க

 நினைக்கும் இமைகளுக்கு

 தான் வலி அதிகம்❗ 

முடியவில்லை

முடியவில்லை எனக்கு நீ செய்த தூரோகத்திற்கு உன்னை  அழிக்க நினைக்கும் என் இதயத்திற்கு தெரியவில்லை என்னால் நீ அனுப்பிய குறுஞ்செய்தியை கூட அழிக்க...