Sunday, 23 May 2021
Saturday, 22 May 2021
என் பதிலே
என் பதிலே
என் விழிகள் தேடும் வர்ணங்கள் நீயே..
என் தனிமை விரும்பும் நினைவுகள் நீயே..
என் கற்பனை வரையும் ஓவியம் நீயே..
என் சிந்தனை கிருக்கும் கவிதை நீயே..
என் இரவுகள் காணும் கனவுகள் நீயே..
என் இளமை புசிக்கும் ஆசைகள் நீயே..
என் காதல் திருடும் பொக்கிஷம் நீயே..
என் இதயம் தொடும் சுவாசம் நீயே..
என் உயிர் வாழும் வாழ்க்கை நீயே..
உன்னில் நான் இல்லை என்றாலும் என்னில் நீயே.......
Sunday, 16 May 2021
Wednesday, 12 May 2021
Monday, 10 May 2021
Saturday, 8 May 2021
என்னவள்
என்னவள்
வளைந்து நெளிந்து
போகும் ராகம் 🎼
🎼கேட்கும் இடம் எல்லாம்
மழை பெய்யும் மேகம்🌧️
கீச்சிடும் தேன் சிட்டு
நீ பேசும் மொழியோ!
வண்ண தாழாட்டு
💖சிறு சிறு
குரும்பு செய்தாலும் 😊
கோபத்தில்
கண்ணம் சிவந்தாலும் 😡
அதிலும் அழகாய்
தோன்றும்
பேரழகே 😊😊
உண்ணை பற்றி பேச
எண்ணிடம் வார்த்தைகளும் இல்லை 🤷♂️
தமிழ் நடையில்
இலக்கனமும் இல்லை 🍓👰🏻
ஆடியது போதும்
🔥 ...ஆடியது போதும்,,,,அடக்கமாயிறு மனிதா,,,!!!.🔥
எவ்வளவு நிதர்சனமான வரிகள்,,,
அடங்கி கிடக்கின்றது உலகம் என்கின்றார்கள்,,,
சூரியன் அதன்போக்கில் உதிக்கின்றது,,,
மழை அதன் போக்கில் பெய்கின்றது,,,
வழக்கமான உற்சாகத்துடன் அடிக்கின்றது அலை,,
மான்கள் துள்ளுகின்றன,
அருவிகள் வீழ்கின்றன,
யானைகள் உலாவுகின்றன,
முயல்கள் விளையாடுகின்றன.
மீன்கள் வழக்கம் போல் நீந்துகின்றன
தவளை கூட துள்ளி ஆடுகின்றது,
பல்லிக்கும் பயமில்லை,
எலிகளும் அணில்களும் அதன் போக்கில் ஓடுகின்றன,
காக்கைகளும் புறாக்களும் மைனாக்களும் சிட்டு குருவிகளும் ஏன் குளவிகளும் கூட அஞ்சவில்லை,,
மானிட இனம் அஞ்சிகிடக்கின்றது
சக மனிதனையும் அதனால் நேசிக்க தயங்குகின்றது,
கூட்டை மூடி பூட்டு போட்டு அடங்கி கிடக்கின்றது.
முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம்.
அதில் அவன் மட்டும் வாழ்ந்தான்.
அவன் மட்டும் ஆடினான்,
அவனுக்கொரு உலகம் சமைத்து அதுதான் உலகமென்றான்,,,
மாபெரும் பிரபஞ்சத்தில் தானொரு தூசி என்பது அவனுக்கு தெரியவில்லை,
உழைப்பென்றான்,சம்பாத்தியமென்றான்,,,
விஞ்ஞானமென்றான்,,,,.
என்னன்னெவோ உலக நியதிகள் சொன்னான்!
உலகம் பிறந்ததும், உயிர்கள் பிறந்ததும் எனக்காக,,
நதியும் கடலும் எல்லாமும் எனக்காக என்றான்,,,
ஆடினான், ஆடினான் அவனால் முடிந்தமட்டும் ஆடினான்,,,
ஓடினான், பறந்தான் உயர்ந்தான் முடிந்த மட்டும் சுற்றினான்,
கடவுளுக்கும் எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம் அவனால் உயிரை படைக்க முடியும் என்னால் முடியாது அதனால் என்ன விரைவில் கடவுளை வெல்வேன் என மார்தட்டினான்,,,
"ஒரு கிருமி கண்ணுக்கு தெரியா ஒரே ஒரு கிருமி சொல்லி கொடுத்தது பாடம்"
"முடங்கி கிடக்கின்றான் மனிதன்"
கண்ணில் தெரிகின்றது பயம்,
நெஞ்சில் தெரிகின்றது கலக்கம்,,,
பல்லிக்கும் பாம்புக்கும் நத்தைக்கும் ஆந்தைக்கும் உள்ள பாதுகாப்பு தனக்கில்லை, இவ்வளவுதான் நான் என விம்முகின்றான்!
மண்புழுவுக்கும் கூட நான் சமமானவன் இல்லையா என்று அழுகின்றான்.
முளைத்து வரும் விதை கூட அஞ்சவில்லை,,,,
நிலைத்துவிட்ட மரமும் அஞ்சவில்லை எனில் மரத்தை விட கீழானவானா நான் என அவனின் கண்ணீர் கூடுகின்றது,,,
மாமரத்து கிளி அவனை கேலி பேசுகின்றது, கண்ணீரை துடைகின்றான்,,,
காட்டுக்குள் விலங்குகளும் பறவைகளும் மரங்களும் நீர் வீழ்ச்சிகள் கூட அவர்கள் பாஷையில் பேசுகின்றன,,,
ஆட்டுமந்தை கூட்டங்களும் , கோழிகளும் கூட பரிகாசம் செய்வதாகவே அவனுக்கு தோன்றுகின்றது
கொரோனாவுக்காக மனிதன் கைகழுவி கொண்டிருப்பதை பார்த்து கொண்டு இடுப்பினை சொறிகின்றது குரங்கு,
மருத்துவமனையில் அவன் அடைபட்டு கிடப்பதை பார்த்துகொண்டே இருக்கின்றது பண்ணையின் கோழி,,,
நிறுத்திவைக்கபட்ட விமானங்களை பார்த்தபடி எக்காள சிரிப்பு சிரித்து பறக்கின்றது பருந்து,,,
நிறுத்தி வைக்கபட்ட கப்பலை கண்டு சிரிக்கின்றது மீன் இனம்,,,
கோவில் யானை உள்ளிருக்க, பசுமாடு உள்ளிருக்க மனிதனை வெளிதள்ளி பூட்டுகின்றது ஆலய கதவு,,,
அவன் வீட்டில் முடங்கி கிடக்க, வாசலில் வந்து நலம் விசாரிக்கின்றது காகம்., கொஞ்சி கேட்கின்றது சிட்டு, கடல் கரை வந்து சிரிக்கின்றது மீன்.
மரத்தில் கனியினை கடித்தபடி இதை பார்த்து சிரிக்கின்றது அணில்,
வானில் உயர பறந்து கொரோனா நோயாளியினை உண்டாலும் எனக்கும் பயமில்லை என்கின்றது கழுகு
தெருவோர நாய் பயமின்றி நடக்க,
வீட்டில் பூட்டைத் தொங்கவிட்டு முடங்கி கிடக்கின்றான் மனிதன்.
அவமானத்திலும் வேதனையிலும் கர்வம் உடைத்து கவிழ்ந்து கிடந்து கண்ணீர்விட்டு ஞானம் பெறுகின்றது மானிட இனம்! நான் யார்தெரியுமா,,,என்று இறுமாப்புடன் பேசியவன் ,மூச்சையும்,பேச்சையும்,துணியினால்(mask)மூடிமௌனித்துக்கிடக்கிறான்.அமெரிக்காவிலும்,இத்தாலியிலும்,பணத்தால் எதையும் மீட்டெடுக்க முடியாது அது எல்லாமே வீண் என்று கொராவினால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடியவர்கள் பணத்தை மழையெனசாலையில்கொட்டி,, இதனால் இனி ஆகக்கூடியதொன்றுமில்லை என்று உரக்க சொல்லி உயிர்விட்டிருக்கிறார்கள்.இன்னும் இது பலமரமண்டைகளுக்குஉரைக்கவில்லை,,,கொரணா உணர்த்தும்,,,, அப்பொழுதாவது திருந்துவார்களா,,,!!??
Subscribe to:
Comments (Atom)
முடியவில்லை
முடியவில்லை எனக்கு நீ செய்த தூரோகத்திற்கு உன்னை அழிக்க நினைக்கும் என் இதயத்திற்கு தெரியவில்லை என்னால் நீ அனுப்பிய குறுஞ்செய்தியை கூட அழிக்க...
-
வெறுப்பும் காதல் தானோ நம்மை வெறுப்பவர்களை நாம் விரும்புவதில்லை' 'இது' காதலில் மட்டும் வேறுபட்டிருக்கிறது
-
நீயே இல்லையே சொல்ல காதலும்... எழுத வார்த்தைகளும் நிரம்பிருந்தென்ன பயன்... வாசிக்கவோ... கேட்கவோ... நீயில்லை எனும் பொழுது..!!!
















